
சென்னையில் நேற்று மரணமடைந்த நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
பிரபல நடிகரும், பட அதிபருமான கே.பாலாஜி சென்னையில் நேற்றுமரணம்
'படித்தால் மட்டும் போதுமா', 'விடிவெள்ளி', `பலே பாண்டியா' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர்.
'ராஜா
கே.பாலாஜிக்கு 10 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அவருக்கு, 'ஆபரேஷன்' மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கடந்த 10 வருடங்களாக 'டயாலிசிஸ்' சிகிச்சைப் பெற்று வந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கே.பாலாஜியின் உடல்நிலை மோசமானது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு, கே.பாலாஜி மரணம்
ஜெயலலிதா அஞ்சலி
ஏராளமான நடிகர்-நடிகைகளும், திரையுலக பிரமுகர்களும் கே.பாலாஜியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கோவையில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கே.பாலாஜியின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர்கள் சத்யராஜ், அஜீத்-ஷாலினி மற்றும் திரளான திரைப் பிரபலங்கள் திரண்டு வந்திருந்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை பாலாஜியின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
தயாரிப்பாறர் ஏவி.எம். சரவணன், இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா
சிவாஜி கணேசனின் புதல்வர்களான ராம்குமார், நடிகர் பிரபு ஆகிய இருவரும் குடும்பத்துடன் வந்து கே.பாலாஜியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜிக்கு ஆறுதல் கூறினார்கள்.
இறுதி சடங்குகளுக்குப் பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கே.பாலாஜியின் உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக பெசன்ட்நகர் மின்சார மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மாலை 3 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது.
கே.பாலாஜியின் மனைவி
சுசித்ராவின் கணவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜியின் நண்பர்...
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இளம் வயதிலேயே சென்னையில் செட்டிலாகிவிட்டார் பாலாஜி. ஆரம்ப காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார்.
'அவ்வையார்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, 'சகோதரி,' 'பலே பாண்டியா,' 'படித்தால் மட்டும் போதுமா' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
'அண்ணாவின் ஆசை' என்ற படம்தான் அவர் தயாரித்த முதல் திரைப்படம்.
நடிகர் திலகம் சிவாஜியின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அதன்பிறகு சிவாஜிகணேசனை வைத்து, ராஜா
அதே போல ஜெயலலிதா தொடர்ந்து இவர் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இவர் தயாரித்த விதி திரைப்படம் வசூலில் புரட்சி செய்தது.
ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கியவர்!
ரஜினியை தமிழ் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய பில்லா படத்தின் தயாரிப்பாளர் கே பாலாஜி.
-thattamil